இந்தியாவில் பான் கார்ட் வழங்குவதில் முன்னணி நிறுவனமான NSDL ( NSDL e-Governance Infrastucture Limited) தற்போது ( Protean eGov Technologies Ltd) பொது மக்களுக்கு விரைவாகவும் எந்த ஆவணங்கள் இன்றியும் பான் அட்டை (PANCARD ) பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் PAPERLES PAN அல்லது kycPAN எனப்படும் திட்டம் ஆகும்.
இந்த பான் ஐடி வழியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 2 மணி நேரத்தில் e-pancard ஆனது வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது.
Physical Pan card ஆனது 10 தினங்களின் விண்ணப்பதாரர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பபடும்.
இந்த PAN Application ID இலவசமாக எவ்வாறு பெறுவது, எவ்வாறு விண்ணப்பம் செய்வது மற்றும் இதன் நிறை குறைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே படிக்கவும்.
இந்த பான் ID ஆனது NSDL ஆல் நேரடியாக வழங்கப்படும் பான் அட்டை விண்ணப்பிபதற்கான ஒரு portal ஆகும்.
இந்த ID பெறுவதற்க்கு உங்களுடை பான் அட்டை (PANCARD) மற்றும் (வங்கி கணக்கு புத்தகம்) Bank Passbook போதுமானது.வங்கி கணக்கு புத்தகத்திற்க்கு பதிலாக Cancelled Cheque அல்லது Bank Statement ம் ஏற்றுக்கொள்ளப்படும்.
நீங்கள் ID விண்ணப்பம் செய்த அன்றே உடனடியாக ஐடி வழங்கப்படும்.
இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை இரண்டும் ஒரே மாதிரியான வேலையை தான் செய்கிறது.Mobile App இல் நீங்கள் மொபைல் வழியாக விண்ணப்பிக்கலாம் இதில் (Laptop அல்லது Desktop வழியாக விண்ணப்பிக்கலாம்.
Mobile App இல் நீங்கள் ஒரே ஒரு Mobile இல் மட்டும் தான் இந்த செயலியை நிறுவ முடியும்.அதனால் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இல்லாதபோது உங்களால் பான் விண்ணப்பம் செய்ய முடியாது.இந்த Web Application வழியாக நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போதும் உங்கள் Staff ஆல் பான் அட்டை விண்ணப்பிக்க முடியும்.
ஆதாருடன் Mobile Number இணைத்திருக்க வேண்டும் என அவசியமில்லை.ஆதாரில் Mobile Number இணைக்காதவர்களுக்கு Biometric Device வழியாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
2 மணி நேரத்தில் E-pan கிடைக்கும்.Physical PAN CARD 10 நாட்களில் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது வழங்கப்படுவது போன்று PAN CARD ல் அப்பாவின் பெயர் இடம்பெற்றிருக்கும்.
Physical PAN CARD ஆனது விண்ணப்பதாரரின் கைக்கு கிடைக்கப்பெற்ற உடன் அதில் தாமாகவே கைய்யெழுத்து(Sign) போட்டு உபயோகப்படுத்தி கொள்ளலாம்.கைய்யெழுத்தை தனியாக Upload செய்ய வேண்டியதில்லை.
ஆதாரில் மொபைல் எண் இணைத்தவர்களுக்கும் இணைக்காதவர்களுக்கும்(Biometric வழியாக) இந்த Portal வாயிலாக PAN அட்டை விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
10 நிமிடத்தில் மிகவும் எளிதாக பான் அட்டை விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
E-pan மட்டும் கிடைக்கும்.
E-pan இல் அப்பாவின் பெயர் இடம்பெறாது.இதனால் பல இடங்களின் ஏற்று கொள்ள மாட்டார்கள்.மேலும் Physical pancard பெற தனியாக வேறு Portal ல் Correction விண்ணப்பம் செய்யும் போது அப்பாவின் பெயருக்கு அத்தாட்சியாக இரண்டு Proofs இணைத்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதில் விண்ணப்பதாரரின் கைய்யெழுத்து இடம்பெறாது.
ஆதாரில் மொபைல் எண் இணைத்திருந்தால் மட்டுமே PAN CARD விண்ணப்பம் செய்ய முடியும்.
விண்ணப்பம் செய்யும் போது ஏதேனும் பிழை
(Server issue) ஏற்பட்டால், அந்த விண்ணப்பதாரருக்கு E-pan கிடைக்க வெகு நாள் ஆகும்.
தற்போது வரை ஆதாரில் முழு பெயர் ( FULL NAME ) உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த portal வாயிலாக PAN CARD விண்ணப்பம் செய்ய முடியும்.
ஆதாரில் Initial ( தலைப்பெழுத்து) இருந்தால் இதன் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது.
உதாரணமாக ஆதாரில் ஒருவரது பெயர் Satheesh அல்லது Satheeh Kumar என முழுமையாக இருந்தால் அந்த நபருக்கு இந்த Portal வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும்.
ஆனால் அவரின் பெயர் Satheesh K என தலைப்பெழுத்துடன்( With Initial) இருந்தால் இதன் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியாது.
ஆனால் வருங்காலத்தில் ( In Future ) அனைத்து விதமான பெயர்களுக்கும் ( with initial also ) PAN CARD விண்ணப்பம் செய்யக்கூடிய அளவில் இந்த Portal மாற்றப்படும் என NSDL தெரிவித்துள்ளது.
தற்போது வரை அந்த வசதி இதில் இல்லை.ஆதாரிலிருந்து Data எடுக்கப்படுவதால் ஆதாரில் என்ன புகைப்படம் இருக்கிறதோ அதே புகைப்படம் தான் பான் அட்டையில் இடம்பெறும்.
ஆனால் வருங்காலத்தில் ( In Future ) தனியாக புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதியை கொண்டு வர NSDL திட்டமிட்டுள்ளது.
பான் அட்டையில் விண்ணப்பதாரரின் கைய்யெழுத்து இதில் இடம்பெறும்.
பான் அட்டை விண்ணப்பம் செய்யும் போது விண்ணப்பதாரரின் கைய்யெழுத்தை பதிவேற்றம் (Upload) செய்ய தேவையில்லை.
Physical PAN CARD விண்ணப்பதாரருக்கு கிடைக்க பெற்ற பின்பு அவரே அதில் கைய்யெழுத்து போடுவதற்கான பகுதி இருக்கும்.அதில் அவர் கைய்யெழுத்து( Sign ) போட்டு உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
தற்போது வரை Minor PAN CARD ( 18 வயதிற்க்கு குறவாக உள்ளவர்களுக்கான பான் அட்டை) மற்றும் பான் அட்டை திருத்தம் ( PAN CARD Correction ) இதில் விண்ணப்பிக்க முடியாது.